Monday, April 12, 2010

பேஸ்புக்


பேஸ்புக், வாழ்வில் நாம் திரும்ப சந்திப்போம் என்று நினைத்துக் கூட பார்த்திடாத பல மனிதர்களை இதுவே  சேர்த்து வைத்தது . இன்னும் எனது கனவுப் பாதையில் பல மனிதர்களை அறிமுகப்படுத்தியும் வழி காட்டியும் வெற்றிப் பாதையின் பல இலக்குகளை சுலபமாக்கி என் வாழ்க்கை என்னும் சாலையை மென்மையாக்கியது.
புதுப்புது வழிகளையும் தந்து இன்னும் பல பரிமாணங்களையும் கூட அறிமுகப்படுத்திய இதுவே என் வாழ்வின் முக்கிய பொக்கிஷத்தையும் ஒரு நாள் தந்தது. பொக்கிஷத்தை விட அதைத் தந்ததால் இதன் மீது எனக்கு அதிகமான அன்பு இருந்தது. என்னை இணைத்த சாலையை விரும்பாமல் என் பயணம் முழுமை ஆகாதே.. என் புதிய பயணமும் இந்த சாலையில் சென்றது.. எத்தனை விதமான உணர்வுகள், கவிதைகள், சந்தோஷங்கள் ... எல்லாம் இந்த சாலையிலே அதிகம் பதிவாகப்பட்டது.
பூ, மொட்டு, மலர் என பலவிதமான வாசனைகளை உணர்த்த இந்த காதலெனும் மனம் ஒரு கூந்தல் தேடி சென்றுவிட்ட பிறகு இனி போக இருப்பது குப்பையில் மட்டுமே என்று இருக்கையில், அந்த மலரை ஒரு தண்ணீரில் மிதக்க விட்டு காதல் என்கிற மணம் இன்னும் இருக்கச் செய்து ரசித்து, நானே நினைத்துவிடாத மணம் எனக்குள்ளே வீச சென்றாய்.
பல யுகங்களை சிறு பொழுதில் உணரச் செய்தது, பல விதிகளைக் கற்றுத் தந்து தண்ணீரில் இருக்கும் நீர் இனி வாடிவிட இன்னும்  சில காலம் இருக்கும் என்று இருக்கையில் தண்ணீரை நீயே குடித்து விட்டாய். 
இரவில் விளக்கை அணைத்த பின் காகிதமோ, பேனாவோ தேட முடியாத பொழுதில் மனதில் தோன்றும் கவிதையைப் போல என் வாழ்வில் வந்துவிட்டுச் சென்றாய். விடிந்த பின் அந்த கவிதையை நினைக்க முயற்சித்தால் உன் விடியலை தேடி விடியாமலே இருந்து விட்டது என் மனம்.  இன்று  நீ இல்லாத ஊரில் உனக்கென்று பயணம் செய்து எனக்கென்ன பயன்? 

Tuesday, April 6, 2010

என் கடல் அலையே ..

கடல்ல வந்த அலைகளில் 
     நான் எடுத்த புகைப்படம் நீ !
எல்லா அலையும் வந்தது, போனது 
நீயும் அலையாய் வந்தாய் - ஆனால் 
நான் எடுத்த புகைப்படத்தில் 
நீ போகவில்லை, போகவும் முடியாது.  

WORLD NEWS

உலகில்  தினமும் என்ன நடக்கிறது என்பதை விட 

உன் மனதில் என்ன நடக்கிறது என்பதே பெரிய போராட்டமாய் இருக்கிறது

Saturday, April 3, 2010

மௌனம்

உன் உதட்டில் 
   நான் சிரித்தேனே 
என் சந்தோசம் 
   நீயாய் இருக்கையில்.. 

உன் உதட்டால்
   சிரிப்பை தின்றாயே
உன் மௌனத்தால் 
   என்னை கொல்கையில்..

ஏப்ரல் 4, 2010 (ஞாயிறு)