Tuesday, May 25, 2010

இரு வரியில் ஒரு ஆறுதல்

என் முகவரிக்கு, எனக்காக 
என் பெயர் குறிப்பிடாமல் 
ஒரு கடிதம் வந்தது.
உன் வார்த்தைகள், உன்னால் 
உன் பெயர் சொல்லாமல் 
ஒரு அறிவுரை சொன்னது.

என் பெயர் குறிப்பிடாத 
எனக்கென்ற கடிதமும் 
உன் பெயரில்லாத 
உன்னுடைய வார்த்தைகளும் 
எப்போதும் அபூர்வம்.

இரு வரியே இருந்தாலும் 
இருமலுக்கு மருந்து போல 
கேட்டதுக்கு மட்டும் பதில் இருந்தது.